மருங்கூரில் ₹7.60 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் டிஎஸ்பி மகேஷ் குமார் இயக்கி வைத்தார்

அஞ்சுகிராமம், நவ.13: மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரம் தோப்பூர் பகுதியில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இது பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. அந்தப் பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தவும், சமூக விரோதிகளை எளிதாக அடையாளம் காணவும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சார்பில் ரூ 7.60 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில், தொழில் அதிபர் ஐயப்பன் முன்னிலையில், கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் இயக்கி வைத்தார். இதில் குமாரபுரம் தோப்பூர் ஊர்வகை தலைவர் சுபாஷ், மருங்கூர் சுப்ரமணிய சுவாமி கோயில்  காரியம் ராமசந்திரன், சுந்தர், ஜென்சன் ரோச் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மருங்கூரில் ₹7.60 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் டிஎஸ்பி மகேஷ் குமார் இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: