கும்மிடிப்பூண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட சேகன்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் பொன்னேரி அரசுப்பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை குடும்பத்தினரோடு கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.என்.குப்பம் கிராமத்தில் உறவினர் இறப்புக்கு பிரகாஷ் சென்றிருந்தார்.
அங்கிருந்தே பணிக்குச் சென்று விட்டு நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு பிரகாஷ் வீட்டுக்குச் சென்றுள்ளார். பிரகாஷ் வழக்கமாக வீட்டைவிட்டு வெளியேறும்போது கதவைப் பூட்டிவிட்டு அருகிலேயே வைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
அதன்படி சாவியை வைத்திருந்த இடத்தில் இருந்து எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளது. இதைக்கண்ட பிரகாஷ் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
அதன்படி விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், மாடி வழியாக வீட்டுக்குள் இறங்கி சாவியை எடுத்து பீரோவில் இருந்த 12 சவரன் நகை, ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணம், 400 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சாவியை கதவுக்கு அருகிலேயே வைத்ததால் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 12 சவரன் திருட்டு appeared first on Dinakaran.