கொடைக்கானலில் நீளமான வாகனங்கள் செல்ல தடை: வரும் 18ம் தேதி முதல் அமல்

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்ல வரும் 18ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரி அறிவுறுத்தலின்படி பொதுநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப்புள்ளியை தாண்டி செல்ல தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

இந்த அறிவிப்பு வருகிற 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாகன நெரிசலை குறைக்க இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 12 மீட்டருக்கு மேல் நீள வாகனங்களுக்கு தடை உத்தரவும் அமலாகும்போது வத்தலக்குண்டு, பழநி மலையடிவாரங்களிலேயே சோதனைச்சாவடிகள் அமைத்து 12 மீட்டர் நீளமுள்ள வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். இதன்மூலம் கொடைக்கானல் மலைச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கொடைக்கானலில் நீளமான வாகனங்கள் செல்ல தடை: வரும் 18ம் தேதி முதல் அமல் appeared first on Dinakaran.

Related Stories: