பல கோடி ரூபாயுடன் நடுரோட்டில் நின்ற வேன்

காலாப்பட்டு: சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து புதுச்சேரி தனியார் வங்கிக்கு பல கோடி ரூபாய் பணத்துடன் நேற்று முன்தினம் மாலை சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலை கீழ்புத்துப்பட்டு என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக வேன் பழுதாகி நின்றது. வேனில் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அவர்களுக்கு பின்னால் பாதுகாப்புக்காக மற்றொரு வேனில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வந்தனர்.

அவர்கள் வேனை சுற்றி பாதுகாப்பாக நின்றனர். இதுபற்றி அதிகாரிகள், சென்னை ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளித்தனர். அவர்களின் ஆலோசனையின்படி புதுச்சேரியில் இருந்து வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் பணம் ஏற்றப்பட்டு புதுச்சேரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. பல கோடி ரூபாய் பணத்துடன் வேன் பழுதாகி நடுரோட்டில் நின்ற சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பல கோடி ரூபாயுடன் நடுரோட்டில் நின்ற வேன் appeared first on Dinakaran.

Related Stories: