×

முன்னெப்போதையும் விட தற்போது அணு ஆயுதங்களை குவிக்கும் ஈரான்: இஸ்ரேல் அமைச்சர் குற்றச்சாட்டு

டெல்அவிவ்: ஈரானில் முன்னெப்போதையும் விட அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக இஸ்ரேல் அமைச்சர் கூறினார். இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே கவலையை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே ஈரான் இரண்டு முறை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தரப்பிலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அளித்த பேட்டியில், ‘ஈரானில் முன்னெப்போதையும் விட தற்போது அதிகமான அணுசக்தி நிலையங்கள் உள்ளன.

எனவே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்றார். ஏற்கனவே ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கி வருவதாக நீண்ட காலமாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் அணுசக்தி விருப்பங்களை மட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரானை அமெரிக்கா விலக்கியது. தற்போது அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அணுசக்தி ஒப்பந்தம், மத்திய கிழக்கின் போர் பதற்றங்கள் மேலும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

The post முன்னெப்போதையும் விட தற்போது அணு ஆயுதங்களை குவிக்கும் ஈரான்: இஸ்ரேல் அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Iran ,Israel ,Tel ,Aviv ,minister ,Middle Eastern ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை