டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நியமிக்கக் கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவு


மதுரை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர, தகுதியான டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்தக் கோரிய மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; அரசு மருத்துவமனைகளில் உள்ள டயாலிசிஸ் இயந்திரங்களின் எண்ணிக்கை எத்தனை? பழுதாகியுள்ள டயாலிசிஸ் இயந்திரங்களின் எண்ணிக்கை எத்தனை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் டயாலிசிஸ் தொழில்நுட்பர்னர்களின் விவரங்கள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

 

The post டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நியமிக்கக் கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: