சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நாளை முதல் 10,11, 12-ஆம் வகுப்புகள் செயல்படும்: வருவாய் கோட்டாட்சியர்

சென்னை: சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நாளை முதல் 10,11, 12-ஆம் வகுப்புகள் செயல்படும் எனவும் மற்ற வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்படும் எனவும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். ஒரு வாரம் தனியார் பள்ளியிலேயே இருந்து மருத்துவ குழு கண்காணிக்கும். மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளும் என்றும் கூறினார். வாயுக்கசிவு ஏற்பட்டதால் திருவொற்றியூர் தனியார் பள்ளி கடந்த 20 நாட்களாக மூடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளதாவது; “சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அனைவரும்
தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நாளை முதல் 10,11, 12-ஆம் வகுப்புகள் செயல்பட வேண்டும் என பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பள்ளியில் நாளை இயங்கும். மாநகராட்சியின் சார்பாக மருத்துவ குழு ஒரு வாரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ குழுவினரிடம் தெரிவிக்கலாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலம் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட கல்வி அலுவலரையும் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

The post சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நாளை முதல் 10,11, 12-ஆம் வகுப்புகள் செயல்படும்: வருவாய் கோட்டாட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: