பணத்தை டெபாசிட் செய்யாமல் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பணத்தை டெபாசிட் செய்யாமல் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட 3 திரைப்படங்களை இந்தி டப்பிங் உரிமையை ப்ளூ பிலிம் நிறுவனத்திடம் இருந்து ரூ.6 கோடியே 60 லட்சத்துக்கு சென்னையை சேர்ந்த பியூனல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் வாங்கி இருந்தது.

அதில் இரண்டு படங்கள் தயாரிக்கப்படாததால் ரூ.5 கோடியை பியூனல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு செலுத்திய நிலையில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இந்தி டப்பிங் உரிமையும் வழங்கப்படாததால் மீதம் உள்ள ரூ.1 கோடியே 60லட்சம் வழங்கப்படவில்லை அந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.11 கோடியை திருப்பி தராமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது, வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பியூனல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் அப்துல் குத்தோஸ் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது பிலிம் கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இத்தனை ஆண்டுகள் காத்திருந்த நிலையில் நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள சுழலில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதை அடுத்து பியூனல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய அசல் தொகையான ரூ.1 கோடியே 60 லட்சம் ரூபாயை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று ஸ்டூடியோ கிரீன் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிட கூடாது எனவும் நீதிபதி அப்துல் அப்துல் குத்தோஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

The post பணத்தை டெபாசிட் செய்யாமல் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: