2024-2025 நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறைக்கு அக்டோபர் மாதம் வரை ரூ.11,733 கோடி வருவாய்

சென்னை: 2024-2025 நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறைக்கு அக்டோபர் மாதம் வரை ரூ.11,733 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவுத் துறைக்கு கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு ரூ.1222 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. முகூர்த்த தினங்களான நவ. 14, 15 தேதிகளில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும். ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். 2 சார்-பதிவளர் உள்ள அலுவலகங்களில் 200-க்குப் பதிலாக 300 கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

The post 2024-2025 நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறைக்கு அக்டோபர் மாதம் வரை ரூ.11,733 கோடி வருவாய் appeared first on Dinakaran.

Related Stories: