×
Saravana Stores

தெலங்கானாவில் பார்மா நிறுவனத்திற்கு நிலம் சேகரிப்பதற்காக சென்ற அதிகாரிகளை தாக்கிய கிராம மக்கள்

*கலெக்டரின் கார் சேதம்

திருமலை : பார்மா நிறுவனத்திற்கு நிலம் சேகரிப்பதற்காக சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தாக்கி, கலெக்டரின் காரை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் விரகாபாத் மாவட்டம் துத்யாலா மண்டலம் லகாச்சார் கிராமத்தில் பார்மா நிறுவனம் அமைக்க நிலம் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் இதற்காக கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் அரசு பார்மா நிறுவனம் அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பணியில் சில காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துத்யாலாவின் புறநகர் பகுதியில் மருந்துத் தொழில் அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்து சேகரிப்பு நிகழ்ச்சியை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கலெக்டர் பிரதீக் ஜெயின், கோடங்கல் நகர்ப்புற வளர்ச்சி ஆணைய சிறப்பு அலுவலர் வெங்கட் ரெட்டி, கூடுதல் ஆட்சியர் லிங்கநாயக், சப் கலெக்டர் உமாசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் சென்றனர்.

துத்யாலாவின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கருத்துகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதால், விவசாயிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் இருந்த பகுதிக்கு சென்றனர். கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் கிராமத்திற்கு வந்ததும் விவசாயிகள் கற்கள் மற்றும் கட்டைகளால் வாகனத்தை சேதப்படுத்தினர்.

போலீசார் உஷார்படுத்தப்பட்டு, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இந்த கல்வீச்சில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. அப்பகுதியினர் போலீசார் தடுக்க முயன்றும் சிலர் காதில் வாங்காமல் அதிகாரிகளை தாக்கினர்.

இதில் அதிகாரி ஒருவர் தடியால் தாக்கப்பட்டார். கலெக்டர் மீது பெண் ஒருவர் தாக்கியதால் பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டு விவசாயிகளை கட்டுப்படுத்த முயன்றனர். கூடுதல் போலீஸ் படையினர் கிராமத்திற்கு வரவழைக்கப்பட்டு விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

The post தெலங்கானாவில் பார்மா நிறுவனத்திற்கு நிலம் சேகரிப்பதற்காக சென்ற அதிகாரிகளை தாக்கிய கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Lakachar village ,Virakabad district ,Dutyala mandal, Telangana ,Dinakaran ,
× RELATED தெலங்கானா மாநிலத்தில் சரக்கு ரயில்...