×
Saravana Stores

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிகட்டுபவர்கள் 5 மடங்கு உயர்வு

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தரவுகள் அடிப்படையில் 2023-24ல் ஆண்டு வருமானம் 50 லட்சத்திற்கு மேல் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 9.39 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால் 2013-14ல் 1.85 லட்சமாக இருந்தது. 2023-24ல் இது ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டின் வருமான வரியில் 76 சதவீதம் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. தனிநபர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளின் எண்ணிக்கை 2013-14ல் 3.60 கோடியாக இருந்தது. 2023-24ல் 7.97 கோடியாக உயர்ந்துள்ளது. இது 121 சதவீதம் அதிகரித்துள்ளது.

The post ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிகட்டுபவர்கள் 5 மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED ராணுவ வாகனம் மற்றும் ரோந்து ஹெலிகாப்டர் வாங்கும் பணி துவக்கம்