அசாம் இடைத்தேர்தல் தொகுதியில் வன்முறை: 2 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

நாகோன்: அசாமின் சமகுரி தொகுதியின் எம்எல்ஏவாக கடந்த 23 ஆண்டுகளாக இருந்தவர் ரகிபுல் ஹூசைன். இவர் அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சமகுரி சட்டப்பேரவை தொகுதி காலியானது. இந்த தொகுதியில் இந்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரகிபுல் ஹூசைனின் மகன் தன்சில் போட்டியிடுகின்றார். பாஜ சார்பில் மாநில பொது செயலாளர்திப்லு ரஞ்சன் சர்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜ எம்எல்ஏ ஜிது கோஸ்வாமி ரூபாஹிஹத் காவல்நிலையத்தில் எம்பி ஹூசைன் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது புகார் கொடுத்தார். தனது வாகனத்தை எரித்ததாகவும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே வன்முறை எதிரொலியாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்தா பிரதிம் சைகியா மற்றும் சப்-டிவிஷனல் காவல் அதிகாரி ரூப்ஜோதி தட்டா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே எம்பி ஹூசைன் தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க கோரி பாஜ சார்பில் கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

The post அசாம் இடைத்தேர்தல் தொகுதியில் வன்முறை: 2 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: