அரியானா ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் 26-ம் தேதி திறப்பு: பார்வையாளர்களுக்கு உதவ சென்னை ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ

சென்னை: அரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வருகிற 26ம் தேதி திறந்துவைக்கிறார். ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகம் அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்திய அரசியமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான நவம்பர் 26ம் தேதி அன்று திறந்துவைக்கிறார். இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் என கருதப்படும் இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னை ஐஐடி அதிநவீன வழிகாட்டி ரோபாவை உருவாக்கியுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், ஐஐடி வடிவமைப்பு பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் வழிகாட்டி ரோபோவை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜிண்டால் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்குமார், டீன் (கல்வி நிர்வாகம்) பத்மநாப ராமானுஜம் மற்றும் ரோபோ வடிவமைப்பு பணியில் ஈடுபட்ட ஐஐடி மற்றும் ஜிண்டால் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் உடனிருந்தனர். வழிகாட்டி ரோபோ பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன், ஜிண்டால் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

The post அரியானா ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் 26-ம் தேதி திறப்பு: பார்வையாளர்களுக்கு உதவ சென்னை ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ appeared first on Dinakaran.

Related Stories: