×
Saravana Stores

சேலத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

சேலம்,நவ.12: கன்னியாகுமரியில் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் வழக்கறிஞர் சங்கம் சார்பிலும் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.இதுகுறித்து சேலம் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரியில் வக்கீல் கிறிஸ்டோபர் கொலை செய்யப்பட்டார். வீராணத்தில் வழக்கறிஞர் ஏழுமலை தாக்கப்பட்டார். இடங்கணசாலையில் வழக்கறிஞர் துரைசாமி வீட்டில் போலீசார் அத்துமீறி நுழைந்தது ஆகியவற்றை கண்டித்தும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் நீதிமன்ற பணியில் இருந்து விலக்கி இருக்கிறோம்’ என்றார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தலைவர் இமயவர்மன் தலைமையில் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

The post சேலத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Christopher ,Kanyakumari ,Salem Bar Association ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு