அதில் மயிலாப்பூர் சண்முக பிள்ளை தெருவை சேர்ந்த ரேவதி (37) என்றும், மயிலாப்பூர் பகுதியில் மெட்ரோ ரயில் பணியால் 2 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், அதை சாதகமாக பயன்படுத்தி தனது ஆண் நண்பர் அய்யனார் (24) என்பவருடன் இணைந்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரேவதி அவரது ஆண் நண்பர் அய்யனார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 180 மி.லி அளவு கொண்ட 450 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அய்யனார் மீது 6 குற்ற வழக்குகள் மெரினா காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மயிலாப்பூர் பகுதியில் மதுபானம் விற்ற 2 பேர் கைது: 450 பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.