தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் நேற்று இரவு அல்லது இன்று காலை இந்த பருவமழையின் 5வது ரவுண்டு ஆட்டம் தொடங்கும். இன்று 12ம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மற்றும் டெல்டாவின் சில பகுதிகளிலும் மழை பெய்யும். பாண்டிச்சேரி, பெங்களூரிலும் மழை பெய்யக்கூடும். இன்று பெய்வதற்கு முன்கூட்டிய ட்ரெய்லர் மழை பெய்யும். இந்த மழை 15 முதல் 20 நிமிடம் பெய்யும்.
மேலும் இந்த மழையின் முக்கிய சீன் நேற்று இரவு அல்லது இன்று காலை தொடங்கும் எனக் கூறியுள்ளார். அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் தவிர்த்த டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைப் பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை அதாவது 13ம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், மாவட்டங்கள் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இன்று காஞ்சி, செங்கையில் கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல் appeared first on Dinakaran.