திருச்செந்தூரில் பிறந்து வாழ்க்கை தேடி சென்னைக்கு வந்த அவர், தமது திறமையாலும், அயராத உழைப்பாலும் உயர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கை வழங்கியவர். அவரது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையில் உலகின் எந்த நாட்டுக்கும் விமானத்தில் இலவசமாக பயணம் செய்யவும், விடுதிகளில் தங்கவும் அனுமதி பெற்றவர்.
அனைவரிடத்திலும் அன்பையும், கனிவையும் பொழிபவர். என் மீது மட்டற்ற அன்பும், மரியாதையும் கொண்டவர். அவரது மறைவு சுற்றுலாத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். வி.கே.டி.பாலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் மறைவு: ராமதாஸ் இரங்கல் appeared first on Dinakaran.