அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார், விஜய் ஆனந்த் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், விஜய் ஆனந்த் சம்பவ இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானர். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post காட்டாங்குளத்தூர் அருகே பைக் மீது கார் மோதி மின் வாரிய ஊழியர் பலி appeared first on Dinakaran.