சின்னமனூர் அருகே தொடர் மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்

*விவசாயிகள் கவலை

சின்னமனூர் : சின்னமனூரில் முல்லைப் பெரியாற்று பாசனத்தில் 4000 ஏக்கர் அளவில் இரு போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜூன் முதல் தேதியில் திறக்கப்பட்ட பாசன நீரைக் கொண்டு மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை மற்றும் விற்பனைக்கு அனுப்பும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.

மேலும் ஒருசில பகுதிகளில் 2ம் போகத்திற்கான நெல் விதைப்புப் பணிகளை விவசாயிகள் துவங்கி உள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், சீலையம்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள வயலில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post சின்னமனூர் அருகே தொடர் மழையால் சாய்ந்த நெற்பயிர்கள் appeared first on Dinakaran.

Related Stories: