இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று அரசு ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். பலர் பணியை புறக்கணிப்பு செய்தனர். இதனால் தெலங்கானா மாநிலத்தில் நேற்று அரசு பணிகள் கடுமையாக பாதித்தது. அதிகாரிகள் மீதான தாக்குதல் ெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 55 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் துத்யாலா, கோடங்கல், பொம்ராஸ்பேட்டை ஆகிய மண்டலங்களில் இணையதள சேவை நேற்று முழுவதும் நிறுத்தப்பட்டு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் 2வது நாளாக இன்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
The post நிலம் கையகப்படுத்த வந்த கலெக்டர், அதிகாரிகளை தாக்கிய 55 பேர் கைது appeared first on Dinakaran.