அப்போது பிரபாகரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் மயங்கி விழுந்துள்ளார். அவரை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே சிறப்பு எஸ்ஐ பிரபாகரன் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பிரபாகரனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். அங்கு மருத்துவமனையில் இருந்த சடலத்தை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.
The post ஆவடி காவல்படை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.