இளநீர் ஏற்றி வந்த டெம்போவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

*விவசாயிகள் எதிர்ப்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேற்று முன் தினம் நாகர்கோவில் – திருநெல்வேலி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இளநீர் ஏற்றி வந்த டெம்போவை மறித்து அதிக லோடு எனக் கூறி ரூ. 20,000 அபராதம் விதித்தனர்.அதிகாரிகளின் இந்த நடவடிக்கை விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இளநீர் பணகுடி, ரோஸ்மியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இளநீர் ஏற்றி வந்த டெம்போவை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே விளைபொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஓவர் லோடு என்ற பெயரில் அபராத விதிப்பு நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இன்று (11ம்தேதி) நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். பணகுடி வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

The post இளநீர் ஏற்றி வந்த டெம்போவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: