மண்டபம் முகாமில் இருந்து குடும்பத்துடன் தப்பமுயற்சி சிறுவர்கள் உள்பட 9 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு

*யாழ்ப்பாணம் முகாமில் விசாரணை

ராமேஸ்வரம் : மண்டபம் முகாமில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரிகோணமலையை சேர்ந்த நிரோஷன், இவரது மனைவி சுதா, குழந்தைகள் அஜய் (14), விதுஸ்வதிகா (13), அபிநயா (4) ஆகியோர் படகில் தப்பி ராமேஸ்வரம் வந்தனர். இதையடுத்து 5 பேரும் மண்டபத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அதே முகாமில் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஞானஜோதி (47), ஜித்து (13), மகேந்திரன் (51) மற்றும் பதிவு இல்லாமல் வசித்த பூலேந்திரன் (54) ஆகிய 4 பேரும் வசித்து வந்தனர். இவர்கள் 9 பேரும் மீண்டும் இலங்கை செல்ல திட்டமிட்டனர்.இதற்காக நாகப்பட்டினத்தில் இருந்து நாட்டுப்படகை விலைக்கு வாங்கியுள்ளனர். பின்னர் 9 பேரும் நேற்று முன்தினம் மாலை மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து அனுமதியின்றி இலங்கைக்கு புறப்பட்டனர்.

நடுக்கடலில் சென்றபோது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் இவர்களது நாட்டுப் படகை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர். விசாரணைக்கு பிறகு இவர்கள் 9 பேரும் மேல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மண்டபம் முகாமில் இருந்து குடும்பத்துடன் தப்பமுயற்சி சிறுவர்கள் உள்பட 9 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: