சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு சூப்பர் வசதி அறிமுகம் செய்துள்ளது. Self Baggage Drop என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது. பயணிகள் தானியங்கி இயந்திரங்கள் மூலம் போர்ட்டிங் பாஸ் பெற்று, தங்களின் உடைமைகளை தாங்களே ஸ்கேன் செய்துகொள்ளலாம். இதற்காக டெர்மினல் 4ல், 8 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் தானியங்கி இயந்திரத்தில் தங்களின் PNR எண்ணை பதிவு செய்து, போர்டிங் பாஸை பெற்றுக்கொள்ளலாம். பின் அந்த பாஸை மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதில் எந்நெத்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், தோன்றும். பின் அதில் OK கொடுத்து உடைமைகளின் எண்ணிக்கை குறித்து பதிவிட வேண்டும்.
அப்போது உடைமைகளின் மொத்த எடை ஸ்கிரீனில் தோன்றும். பின் உடைமைகளில் ஒட்டிக்கொள்வதற்கான Tag-கள் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும். Tag-ஐ நாமே ஒட்டி உடைமைகளை கன்வயர் பெல்டில் வைத்துவிட்டால் விமானத்தில் ஏற்றுவதற்கு கொண்டு செல்லப்படும். இதனால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம். appeared first on Dinakaran.