பாப்பிரெட்டிப்பட்டி, நவ.11: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே உள்ள ஜாலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(29). தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் இவரது மனைவி மைவிழி(24).
டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயாராகி வரும் இவர், தர்மபுரியிலுள்ள மையத்தில் பயிற்சி வந்தார். இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, அங்கு மைவிழி இல்லாததை கண்டு சம்பத்குமார் திடுக்கிட்டார். பல்வேறு இடங்களிலும், உறவினர் மற்றும் தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொம்மிடி போலீசில் சம்பத்குமார் புகார் தெரிவித்துள்ளார்.
அதில், பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு தனியார் பஸ்சில் வரும்போது, அதன் டிரைவரான கணபதி என்பவருக்கும், எனது மனைவிக்கும் நட்பு ஏற்பட்டு பழகி வந்தனர். எனவே, மைவிழியை கணபதி கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post இளம்பெண் கடத்தல் ; டிரைவர் மீது புகார் appeared first on Dinakaran.