பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க முடிவு: 3 மாதங்களில் பணிகள் தொடங்கும் என தகவல்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநிலைத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  சென்னையில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ‘தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கபடுகின்றன.

இதில், சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் மாசற்ற நிலமாக கருதி ராம்சார் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இந்த சதுப்பு நிலத்தில் குப்பை கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகளால் பள்ளிக்கரணை சதுப்பு நில அங்கீகாரத்தை இழந்தது. இந்த நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் வனத்துறை மூலம் சீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடந்த 1960 ஆண்டு 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது. தற்போது நகரமயமாதல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிற காரணங்களால் 700 ஹெக்டேர் பரப்பளவிற்கு சுருங்கி உள்ளது. அதன்படி, இந்த சதுப்பு நிலத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக ரூ.21 கோடியில் வனத்துறை சார்பில் பணிகளை தொடங்க உள்ளோம்.

பெரும்பாக்கம் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், சதுப்பு நில பகுதியை சுற்றி கரைகள் அமைத்தல், ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம். மேலும், இயற்கைக்கு ஏற்ற பொருட்கள் மூலம் நடைப்பாதை அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல், தாவரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை அடுத்த 3 மாதங்களில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க முடிவு: 3 மாதங்களில் பணிகள் தொடங்கும் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: