நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்ற பொதுமக்களை கைது செய்தது போலீஸ்

ஆம்ஸ்டர்டாம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 19 ஆம் இடத்தில் இருக்கும் நெதர்லாந்தில் இதுவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பிரதமர் மார்க் ரட்டே ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடைகள், உணவகங்கள், மதுபான விடுதிகள், திரையரங்குகள், அருங்காட்சியங்கள் ஜனவரி 14 வரையும், கல்விக் கூடங்கள் ஜனவரி 9 வரை மூடப்பட்டிருக்கின்றன. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்தில் மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.ஆம்ஸ்டர்டாமில் பேரணியாக சென்ற மக்கள் ஊரடங்கு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து குரலெழுப்பினர். பேரணியை தடுக்க காவலர்கள் முற்பட்டபோது இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவலர்களை தாக்கிய நூற்றுக்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து இழுத்துச் சென்றனர். பொதுமுடக்கத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும் நெதர்லாந்து மக்கள், பிரதமர் மார்க் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 17,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.      …

The post நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்ற பொதுமக்களை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: