- ஐசிசி சாம்பியன்கள்
- பாக்கிஸ்தான்
- பிசிசிஐ
- புது தில்லி
- ICC சாம்பியன்ஸ் கோப்ப
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்
- தின மலர்
புதுடெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் விளையாட்டின்போது, பாகிஸ்தானில் போட்டிகள் நடத்தப்பட்டால் இந்திய அணி கலந்து கொள்ளாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9வது எடிஷன் வரும் 2025, பிப்ரவரியில் துவங்க உள்ளது. ஒரு நாள் போட்டி வடிவத்தில் நடக்கும் ஐசிசி கோப்பைக்கான இறுதிப் போட்டி வரும் மார்ச் 9ல் நடக்கும் எனத் தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இந்த போட்டிகளில், இந்தியா, பாக். உள்பட 8 நாடுகளின் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், இந்தியா – பாக் அணிகள் இடையிலான போட்டிகள், பாக்கில் நடந்தால் அவற்றில் இந்திய அணி பங்கேற்காது என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘பாக். உடனான போட்டிகள் அந்நாட்டில் நடந்தால், இந்திய அணி பங்கேற்காது என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இரு நாடுகள் இடையிலான போட்டிகள், பொதுவான இடத்தில் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம். அநேகமாக, அந்த இடம் துபாயாக இருக்கலாம்’ என்றன.
The post ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை பாக்.கில் போட்டி நடந்தால் இந்திய அணி பங்கேற்காது: பிசிசிஐ திட்டவட்டம் appeared first on Dinakaran.