×

இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய நியூசிலாந்து அதிரடி பிளான்: நெல்சனில் இன்று 3வது டி20

நெல்சன்: நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதுவரை நடந்துள்ள 2 டி20 போட்டிகளில் முறையே 8, 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நெல்சனில் நடக்கிறது.

இந்திய நேரப்படி காலையில் தொடங்கும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் தலைமையில் டாரியல் மிட்செல், ஜேகப் டஃப்பி, மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, ஜாக்ரி ஃபோக்ஸ், மிட்செல் ஹே, டிம் ராபின்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சாரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் குசால் பெரேரா, பதும் நிசாங்கா, வனிந்து அசரங்கா, குசால் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவது நியூசிக்கு சாதகமான அம்சம். அதை பயன்படுத்தி, இன்றைய போட்டியில் இலங்கையை வென்று ஒயிட்வாஷ் செய்ய நியூசி வீரர்கள் அதிரடி திட்டத்துடன் களமிறங்க உள்ளனர்.

The post இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய நியூசிலாந்து அதிரடி பிளான்: நெல்சனில் இன்று 3வது டி20 appeared first on Dinakaran.

Tags : Lanka ,Nelson ,Zealand ,T20 ,New Zealand ,Whitewash Sri Lanka ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி.20 போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி