×

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் ஜோகோவிச், கிர்ஜியோஸ் அதிர்ச்சித் தோல்வி

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த பிரிஸ்பேன் சர்வதேச டோர்னமென்டில் இரட்டையர் பிரிவில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்ஜியோஸ் இணை தோல்வி அடைந்தது. டென்னிஸ் உலகின் நம்பர் 7 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் இணை, குரேஷியாவின் நிகோலா மெக்டிக், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் இணையுடன் நேற்று நடந்த போட்டியில் மோதியது.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் இரு செட்களில் தலா ஒரு வெற்றி என இரு தரப்பும் பெற்றன. இதனால் 3வது சுற்றில் இரு தரப்பு வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். நீண்ட நேரம் நடந்த இந்த செட்டில் ஜோகோவிச், கிர்ஜியோஸ் முக்கியமான கட்டத்தில் தவறுகள் செய்ததால் 10-8 என்ற புள்ளிக் கணக்கில் செட்டை இழந்தனர். இதனால், 6-2, 3-6, 10-8 என்ற செட் கணக்கில் மெக்டிக், வீனஸ் இணை வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த தோல்வியை அடுத்து, ஜோகோவிச், கிர்ஜியோஸ் இணை போட்டியில் இருந்து வெளியேறியது.

The post பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் ஜோகோவிச், கிர்ஜியோஸ் அதிர்ச்சித் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Brisbane International Tennis ,Djokovic ,Kyrgios ,Brisbane ,Novak Djokovic ,Nick Kyrgios ,Brisbane International Tournament ,Brisbane, Australia ,Serbia ,International Tennis ,Dinakaran ,
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பெலாரஸ்...