மெட்ராஸ் ஐ வருவதை தடுக்க முடியாது, வந்த பிறகு சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் கண்களைப் பார்த்தால் மெட்ராஸ் ஐ பரவும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது மிகவும் தவறானது. இது ஒரு தொற்று நோய் மட்டுமே. மெட்ராஸ் ஐ வந்தவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது. அவர்களுக்கென்ன தனிசுய பாதுகாப்பு மிகவும் முக்கியமாக உள்ளது. அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். கண்களை தொடாமல் இருக்க வேண்டும், கண்ணாடி அணிவது மூலம் விரைவில் குணமடைவதற்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள கூடாது. ஏன் என்றால் கண் ஒவ்வாமைக்கு கண்கள் சிவக்கும் அதனை மெட்ராஸ் ஐ என்று சுய சிகிச்சை எடுத்து கொண்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே முறையாக மருத்துவர்கள் பரிந்துரை செய்த மருந்தை பயன்படுத்த வேண்டும். வழக்கமாக மெட்ராஸ் ஐ குணமடைய 2 முதல் 4 வாரம் எடுத்துக் கொள்ளும். எனவே தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இடையில் நிறுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி செல்போனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் அது நோயை இன்னும் அதிகரிக்க வழிவகுக்கும்.
* நோய்க்கான அறிகுறிகள்..
மெட்ராஸ் ஐ வருதற்கு முன் பல வகையான அறிகுறிகள் தென்படும். குறிப்பாக கண்கள் சிவந்து போதல், கண்கள் மற்றும் அதன் இமைகளில் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்களின் நமைச்சல், போன்ற அறிகுறிகள் உண்டாகும். பாக்டீரியாவால் கண்ணிமையில் சீழ் வர வாய்ப்பு உள்ளது. நோய்த்தொற்று கண் பார்வைக்கு பரவினால், பார்வை இழக்கும் அபாயம் உள்ளது. மெட்ராஸ் ஐ -யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷமும் ஏற்படலாம். சிலருக்கு காய்ச்சல் வந்து அதற்கு பிறகு கண் வலி ஏற்படும்.
* புதிய கான்டாக்ட் லென்ஸ் அணியவும்
கண் தொற்றுள்ள நோயாளிகள், அவர்களது கண்களிலிருந்து வரும் திரவ வெளியேற்றத்தை துடைக்க டிஸ்யூ பேப்பரை (tissue paper) பயன்படுத்த வேண்டும். அத்துடன் தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு அவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணிய வேண்டும் என மருத்துவர் முதுநிலை ஆலோசகரும், கண்புரை அறுவை சிகிச்சை நிபுணருமான திரிவேணி தெரிவித்துள்ளார்.
The post கடந்த 15 நாட்களாக சென்னையில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’ appeared first on Dinakaran.