×

அருமை நண்பர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!!

சென்னை :நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என பல அவதாரங்களை பெற்றுள்ள கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு – பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post அருமை நண்பர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chief Minister ,M.K.Stalin ,Udayanidhi Stalin ,Chennai ,
× RELATED டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு முதல்வருக்கு கமல் பாராட்டு