×

இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத் தயார் :அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்

சென்னை :சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவர்கள் போதிய அளவில் உள்ளனர். 3 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 18,460 நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகளிலும் தகுதி பெற்ற நிரந்தமான மருத்துவ முதலவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாம்பு கடி, நாய் கடிக்கு சுகாதாரத்துறை மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் 8 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 2,553 மருத்துவப்பணியிடங்களுக்கு, 23,917 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2025 ஜனவரியில் நடைபெறும். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? .சுகாதாரத்துறை மீது களங்கம் ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத்தயார்,”எனத் தெரிவித்தார்.

இதனிடையே 13 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதிலில், “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிக்கிறது; அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், காலாவதி அரசியல்வாதியாக மாறி உள்ளனர்”இவ்வாறு தெரிவித்தார்.

The post இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத் தயார் :அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் appeared first on Dinakaran.

Tags : EPS ,Minister ,Subramanian Sawal ,Chennai ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,M. Subramanian ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை வைத்து...