உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் 200 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்த விபத்தில் 36 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா அடுத்த குபி அருகே, இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென பள்ளத்தில் விழுந்தது. பேருந்தில் 42 பயணிகள் பயணம் செய்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். தற்போது மீட்பு பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரி வினீத் பால் கூறுகையில், ‘இந்த பேருந்து கிணத்தில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. உள்ளூர் மக்கள் அந்த பேருந்தில் பயணம் செய்தனர். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்தது. சால்ட் மற்றும் ராணிகேட்டில் இருந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

The post உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: