×
Saravana Stores

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை குறித்த புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

பெரம்பலூர், நவ.5:பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன் கொடுமைகள் குறித்த புகார்களை 18002021989 அல்லது 14566 உதவி மைய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்ற மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரால் 2023-2024- ஆம் ஆண்டு சட்ட மன்றப் பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது \”ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன் கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன்“ கூடிய உதவி மையம் அமைக்கப் படும்\” என அறிவிக்கப் பட்டது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்குப் பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர் பான முறையீடுகளை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில், அலுவலக பணி நேரத்தில் புகார்களைத் தெரிவிக்கலாம். இந்த தொலைபேசி சேவையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன் படுத்தி பயன்பெறுமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை குறித்த புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian ,Perambalur ,District ,Collector ,Grace Bachau ,Adi Dravidas ,Adi Dravidar ,Dinakaran ,
× RELATED ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர் நல...