சாத்தான்குளம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

 

சாத்தான்குளம், நவ. 5: தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க நிதியுதவியுடன் சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்கம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம், சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அரிமா சங்க பட்டயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். சங்க தலைவர் முருகேசன், செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனை வழங்கினர். இதில் 250 பேர் பங்கேற்று பயனடைந்தனர். 43 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் அரிமா சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுந்தர், கனகராஜ். சாமுவேல், ராஜதுரை, அருண்குமார், செந்தில் ஆறுமுகம், முத்துச்சாமி, நந்தகோபால், வியாபாரிகள் சங்க தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் சசிகரன், பாஜ ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட பிரசார பிரிவு துணை தலைவர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சாத்தான்குளம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: