×

லாட்ஜில் அடைத்து வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னை வாலிபர் கைது

திருமலை: பள்ளிக்கு சென்று சிறுமியை லாட்ஜிக்கு அழைத்து சென்று அங்கு அடைத்து வைத்து 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த சென்னை வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(22). சென்னையில் உள்ள ஒரு ஓட்டல் தொழிலாளியாக உள்ளார். இருவருக்குமிடையே இன்ஸ்டராகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சாட்டிங் மூலம் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் காதலாக மாறியது. அப்போது ‘உன்னை சந்திக்க நான் திருப்பதிக்கு வருகிறேன்’ என்று சதீஷ் கூறியுள்ளார். அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன் சதீஷ் திருப்பதி வந்தார். பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த சிறுமியை வழிமறித்து நைசாக பேசி திருப்பதியில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்து சென்றார். அங்கு அறை எடுத்து சிறுமியுடன் தங்கிய சதீஷ், ஆசை வார்த்தை கூறி சிறுமியை 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் சிறுமி பள்ளிக்கு வரவில்லை என அவரது பெற்றோருக்கு போன் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அலிபிரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து சிறுமியை தேடினர். நேற்று செல்போன் சிக்னல் மூலம் லாட்ஜில் இருந்த சிறுமியை கண்டுபிடித்த போலீசார் அவரை மீட்டனர். மேலும் சதீஷை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சதீஷை கைது செய்தனர்.

The post லாட்ஜில் அடைத்து வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,AP ,Tirupati ,
× RELATED ரயில் சக்கரத்தில் சிக்கி கடை உரிமையாளர் பலி