இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 ரூபாயும், ஜிஎஸ்டி ஆக 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்க ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி பணத்தை செலுத்தாமல் பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், அந்த படத்தை வெளியிட தயாராக உள்ளதாகக் கூறி படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மனுவுக்கு வரும் 18ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
The post பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.