தமிழக போக்குவரத்து துறை சார்பில் கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்களில் இயக்கப்பட்ட 10,784 சிறப்பு பேருந்துகளில் 5.76 லட்சம் பேர் பயணம் செய்தனர். இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட்டது. விடுமுறை இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்து நாளை (திங்கட்கிழமை) அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்பதால் பலரும் இன்றைய தினம், சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,735 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல சென்னையை தவிர மற்ற நகரங்களுக்கு 1,540 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்றும் சென்னைக்கு கூடுதலாக 800 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் நெரிசலில் சிக்காமல் இருக்க, போக்குவரத்து காவல் துறையும், போக்குவரத்து கழகங்களும் சேர்ந்து பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில் பகுதிகளில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிகாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பயணிகளுக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
The post தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப கூடுதலாக 1,735 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.