×

ரயில் நிலைய மேற்கூரை விழுந்ததில் செர்பியாவில் 14 பேர் பலி

பெல்கிரேட்: செர்பியாவில் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். செர்பியா நாட்டின் நோவி சாட் நகரில் உள்ள ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சர் ஐவிகா டி.சிக் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஒருவர் வடக்கு மாசிடோனியாவை சேர்ந்தவர். ஐந்து பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக செர்பியா அரசு தெரிவித்துள்ளது.

The post ரயில் நிலைய மேற்கூரை விழுந்ததில் செர்பியாவில் 14 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Serbia ,Belgrade ,Novi Sad ,Dinakaran ,
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் ஜோகோவிச், கிர்ஜியோஸ் அதிர்ச்சித் தோல்வி