மோமோஸ், ஷவர்மாவை தொடர்ந்து மயோனைஸ் பயன்படுத்த தடை: தெலங்கானா அரசு உத்தரவு

திருமலை: அசைவ உணவகங்களில் தற்போது மயோனைஸ் எனப்படும் முட்டையை எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் சாஸ் கொடுக்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் தெருவோர வியாபாரியிடம் மயோனைஸ் கலந்த மோமோஸ் சாப்பிட்ட பெண்ணுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த 27ம் தேதி இறந்தார்.

இதேபோல் அந்த கடையில் மயோனைஸ் சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் மயோனைஸ் பயன்படுத்த தடை விதித்து முதல்வர் ரேவந்த்ரெட்டி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். ஏற்கனவே தெலங்கானாவில் மோமோஸ், ஷவர்மா போன்ற உணவுப்பொருட்களுக்கு தடை உள்ள நிலையில் தற்போது மயோனைசுக்கும் மாநில அரசு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மோமோஸ், ஷவர்மாவை தொடர்ந்து மயோனைஸ் பயன்படுத்த தடை: தெலங்கானா அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: