இதையடுத்து, பூந்தமல்லி சாலையை இணைக்கும் வகையில் பாடிகுப்பத்தில் ரூ.22.6 கோடி செலவில் 90 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த மேம்பாலத்தை கட்டுவதற்கான டெண்டர் உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்து 14 மாதங்களில் பாலம் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாடிகுப்பத்தில் உள்ள கூவத்தின் மீதுள்ள பாதை மழை வெள்ள நேரத்தில் கடுமையாக பாதிக்கப்படும். பூந்தமல்லி சாலைக்கு வரமுடியாத நிலை இருந்தது.
இந்த பாலம் ரயில் நகர் சாலை, பாடிகுப்பம் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் கட்டப்படவுள்ளதால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. தற்போது மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாலம் விரைவில் கட்டப்படுமானால் எங்கள் பகுதியில் போக்குவரத்து இலகுவாகிவிடும் என்று ரயில் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாடிக்குப்பம் மெயின் ரோடு – பிள்ளையார் கோயில் தெரு இடையே 900 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி செல்லும் வாகனங்கள் நெரிசல் மிகுந்த 100 அடி ஜவஹர்லால் நேரு சாலையை எளிதாக கடக்க முடியும். இந்த சாலை விரிவாக்க திட்டத்தால் ரயில் நகர் பாலம் வழியாக பூந்தமல்லி உயர் மட்ட சாலைக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியும். புதிய பாலம் கட்டப்பட்டுவிட்டால் இந்த பகுதியில் போக்குவரத்து பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
The post பல ஆண்டுகள் மக்கள் கோரிக்கைக்கு பிறகு ரூ.23 கோடியில் பாடிகுப்பத்தில் மேம்பாலம்: 14 மாதங்களில் முடிக்க சிஎம்டிஏ திட்டம் appeared first on Dinakaran.