இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழ்ந்த இந்த மோதலால் அடுத்து என்ன ஆகுமோ என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருதரப்பும், லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தத்தம் வீரர்களை நிறுத்தி இருந்தனர். இதே சூழ்நிலை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்ததால் லடாக்கில் இயல்பு நிலை திரும்பாமல் அப்பகுதி மக்கள் அவதியுற்றனர். சூழ்நிலையில் மாற்றம் ஏற்படாததால், இருதரப்பு உறவு மேலும் மோசமடைந்தது.
இதையடுத்து, இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அப்போது, இரு தரப்பும், தம் வீரர்களை வாபஸ் பெறுவது குறித்து தீவிர ஆலோசனை நடந்தது. இறுதியாக கடந்த, அக். 21ல் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அப்போது, டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ஒன்றிய வெளியுறவுத் துறை செயலாளர், ‘கடந்த 2020ல் நிகழ்ந்த மோதல் விவகாரம் தொடர்பாக, பல வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும், தம் வீரர்களை வாபஸ் பெறுவது என்றும், அதேசமயம் ரோந்து பணிகளில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது’ என்றார். இந்த அறிவிப்பை தொடர்ந்து இரு நாட்டு வீரர்களும், லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட்டனர். இதனால் லடாக் பகுதியில் பதற்றம் தணிந்து மீண்டும் அமைதி நிலவத் துவங்கியது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தீபாவளிப் பண்டிகையையொட்டி, இந்தியா, சீனா நாடுகளின் எல்லை கட்டுப்பாட்டு கோடருகே உள்ள பகுதிகளில் இரு தரப்பு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று, டெம்சோக் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து மீண்டும் துவக்கி உள்ளனர். இதே போன்று, சீன ராணுவ வீரர்களும் விரைவில் ரோந்து பணிகளை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. தெஸ்பாங் பகுதியில் இந்திய ராணுவம் விரைவில் ரோந்து பணியை தொடங்கும். இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியா – சீனா இடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் லடாக் பகுதி கமாண்டர் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடரும்’ என்றார்.
* லடாக்கின் கல்வான் மோதலை தொடர்ந்து சீன எல்லையில் கடந்த 4 ஆண்டுகளாக பதற்றம் நிலவியது.
* அண்மையில் உடன்பாடு ஏற்பட்டதைதொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் வாபஸ் பெறப்பட்டன.
* பதற்றம் தணிந்ததால் இந்திய ராணுவம் மீண்டும் ரோந்து பணியை துவங்கியுள்ளது.
The post எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில் லடாக்கில் மீண்டும் இந்திய ராணுவம் ரோந்து: சீன வீரர்களுக்கு தீபாவளி ‘ஸ்வீட்’ appeared first on Dinakaran.