அதில், சென்னை விமான நிலைய கழிவறையில் சக்தி வாய்ந்த திரவ வடிவிலான வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் அதிகாலையில் வெடித்து சிதறும். இதனால் விமான நிலையத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து பரபரப்படைந்த விமான நிலைய அதிகாரிகள், அவசரமாக சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த அவசர ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர்.
அந்த இ-மெயில் தகவலில் உள்நாட்டு விமான நிலைய கழிவறையா அல்லது சர்வதேச விமான நிலைய கழிவறையா என்று எதுவும் குறிப்பிடாததால், உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் சோதனைகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை உள்நாட்டு விமான நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதி, புறப்பாடு பகுதி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கழிவறைகளையும் துருவி துருவி ஆய்வு செய்தனர்.
ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இதையடுத்து இது வழக்கமான வெடிகுண்டு புரளி என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு, சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் தரப்பில், சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, இ-மெயில் எந்த ஐடியில் இருந்து வந்தது என்று ஆய்வு செய்து, வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
The post சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.