அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பொது விநியோக திட்டத்தை செயல்படுத்தும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 152 விற்பனையாளர்கள், 10கட்டுநர்கள் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.150 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 கல்வித்தகுதியாகும். ஆனால் பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் அதிகமாக விண்ணப்பித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 7ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். அதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 152 விற்பனையாளர்கள், 10 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் 7ம் தேதி மாலை 5.45 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிப்பார்ப்பு முடிந்ததும், நேர்முக தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்,’’ என்றனர்.
The post வரும் 7ம்தேதி கடைசிநாள் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு இன்ஜினியர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.