×

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

பட்டுக்கோட்டை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தை சேர்ந்தவர் தீபன் (33). அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து, தகாத முறையில் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி புகாரின்படி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அதிமுக நிர்வாகி தீபனை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : HIPSTER ,BOXO ,PATUKOTA ,Deepan ,Panvayal village ,Patukkot, Thanjavur district ,Adimuka Thanjavur ,Southern District Information Technology Team ,Archetypal ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது