×

17 வயது சிறுமியை திருமண ஆசைக்காட்டி பலாத்காரம் கார் டிரைவர் மீது போக்சோ வழக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய

வேலூர், டிச. 27: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமண ஆசைக்காட்டி பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி கர்ப்பிணியானார். இதுதொடர்பாக கார் டிரைவர் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு அழகு கலை தொடர்பாக படித்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் ஜமீர் (25) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தினமும் செல்போனில் நீண்டநேரம் பேசியும், நேரில் சந்தித்தும் பழகினர். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஜமீர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கேட்டபோது நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், ஜமீர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரை தேடி வருகின்றனர்.

The post 17 வயது சிறுமியை திருமண ஆசைக்காட்டி பலாத்காரம் கார் டிரைவர் மீது போக்சோ வழக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய appeared first on Dinakaran.

Tags : Boxo ,Instagram ,Vellore ,Poxo ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை...