அப்போது அங்கு கார் கதவை திறந்து வைத்து காத்திருந்த நபர் பூந்தொட்டியை வாங்கி காருக்குள் வைத்த உடன் அவர்கள் பிஎம்டபிள்யூ காரில் சிட் என பறந்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பலரும் அந்த பெண்ணை விமர்சித்து வருகின்றனர். லட்சம், லட்சமாக பணம் கொடுத்து கார் வாங்கிய பெண்ணால் சில நூறு ரூபாய்களை கொடுத்து பூந்தொட்டியை கூட வாங்க முடியவில்லையா என்று சிலர் விமர்சிக்கும் நிலையில் மற்றும் சிலரோ அந்த பெண் பூந்தொட்டியை திருடவில்லை சாலை ஓரம் இருந்த பூந்தொட்டிக்கு அவர் ஆதரவு கொடுத்துள்ளார் என்றும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
The post பிஎம்டபிள்யூ காரில் வந்து பூந்தொட்டியை திருடிச் சென்ற பெண்: இணையத்தில் கிண்டலடித்து வரும் நெட்டிசன்கள் appeared first on Dinakaran.
