தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் தங்கக் கட்டிகளை விற்ற புதுச்சேரி பாஜக எம்.பி

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. ஹவாலா இடைத்தரகர்கள் மூலம் 20 கிலோ தங்கக் கட்டிகளை புதுச்சேரி பாஜக எம்.பி. செல்வகணபதி விற்றதாக தகவல் தெரிவித்துள்ளார். ரூ.1 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்து கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார் சூரஜ்.

ஹவாலா இடைத்தரகர்கள் என கூறப்பட்ட பங்கஜ், சூரஜ் ஆகியோரிடம் நேற்று 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ரூ.1 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்து கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார் சூரஜ். விசாரணையில் 4 கோடி ரூபாய் பண பரிமாற்ற விவகாரத்தில் தீபக் லால்வாணிக்கு தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.

புதுச்சேரி எம்பி செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகளை விற்றுத் தருமாறு கூறியதாக சூரஜ் வாக்குமூலம். மேலும் 5 கிலோ தங்கக் கட்டிகளை புதுச்சேரியிலேயே செல்வகணபதி விற்பனை செய்து விட்டதாகவும் சூரஜ் வாக்குமூலம். தேர்தல் செலவுக்காகத்தான் தங்க கட்டிகளை விற்றுக் கொடுத்தேன் என்று சூரஜ் ஒப்புக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல்.

தமிழ்நாடு பாஜக நிர்வாகி கோவர்தனின் ஓட்டுநர் விக்னேஷிடமும், செல்போனில் அடிக்கடி சூரஜ் பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூரஜூடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் தங்கக் கட்டிகளை விற்ற புதுச்சேரி பாஜக எம்.பி appeared first on Dinakaran.

Related Stories: