அமராவதிக்கு ரயில் இணைப்பு; ரூ. 2 ஆயிரத்து 245 கோடி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

டெல்லி: ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதிக்கு ரயில் சேவை அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி இருக்கும் என்று கடந்த ஜூனில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில் அமராவதிக்கு ரயில் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இன்றைய ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; அமராவதியை நாட்டின் சிறந்த நகரமாக மாற்ற விரும்புவதால், ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ஒன்றிய அரசுக்கு பாராட்டுகள். விஜயவாடா – ஹைதராபாத் ரயில் பாதையில் யெருபாலம் முதல் நாம்பூர் வரை 52 கிமீ தூரத்திற்கு ரயில் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக அமராவதி நதியில் 3.2 கிமீ நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் பாதை சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களையும் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அமராவதிக்கு ரயில் இணைப்பு; ரூ. 2 ஆயிரத்து 245 கோடி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: